No results found

    டேங்கர் வாகனங்களை முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும்


    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனங்களும் மற்றும் தண்ணீர் டேங்கர் வாக னங்களும் மோட்டார் வாகன சட்டம் 1989, பிரிவு 39ன்படி பதிவு செய்து இயக்கப்பட வேண்டும். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி கழிவு நீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் முறைப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்று இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல் முறை ரூ.25 ஆயிரம் அபராதமும், தொடர்ந்து அனுமதி பெறாமல் இயக்கப்பட்டால் 2-வது முறை ரூ.50 ஆயிரம் அபராதமும் அதனையும் மீறி தொடர்ந்து இயக்கினால் வாகனம் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் வாக னங்கள் விதிமீறி இயக்கப் பட்டால் போக்குவரத்துத் துறை, காவல்துறை, நகர்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மேற்கண்ட கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகன உரிமையாளர்கள், தண்ணீர் டேங்கர் வாகன உரிமையாளர்கள் வாகனத்தினை முறையாக பதிவு செய்து முறையாக அனுமதி பெற்று இயக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال